image
image
image

St. George Church

Thirumulanagar

pict

Cathedral

 

Parish Name             :   St.George Church
Address                     :  Thirumoolanagar, Azhagappapuram (Po) K.K. Dt. 629 401
Patron Saints            :  St. George

A Brief History :

இயற்கை எழில் பொங்கும் புனித ஜார்ஜியாரின் திருத்தலமும், மலையடிவாரதத்தில் அமைந்துளள் குருசுமலையில் வீற்றிருக்கும் புனித தோமையார் திருத்தலமும் அமைந்துள்ள எங்கள் பங்கானது எல்லாம் வல்ல இறைவனின் திருவருளாலும், அருட்தந்தை மைகக்கிள் ஜெகதீசு அவர்களின் முயற்சியாலும் நமது தாய்ப் பங்கான அழகப்பபுரம் பங்கிலிருந்து பிரிந்து 23.07.2015 அன்று புதிய பங்காக உருவானது. மேதகு. ஆயர் இவோன் அம்புரோஸ் அவர்களால் திருநிலைப்படுத்தப்ட்டது. எம் பங்கின் முதல் பங்குத்தந்தையாக அருடத்ந்தை. ஜோசப் ஸ்டார்லின் அவர்கள் பணியாற்றினார்கள். தற்போதைய பங்குதந்தையாக அருடத்ந்தை.பீடட்ர் பாஸ்டியன் சே. அவர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

சிறப்பு வரலாறு:
புனித ஜார்ஜியாரின் சிறிய ஆலயம்அருட்தந்தை. பால்ராபின்சன் அவர்களது முழு முயற்சியுடனும், ஊர் மக்களின் உதவியுடனும் கட்டப்பட்டு ஆயர் எஸ். டி. அமல்நாதர் ஆண்டகை அவாக்ளால் 23.08.1981-ல்அர்ச்சிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. புனித ஜார்ஜியார் பங்கு மண்டபம் கட்டப்பட்டு 08.07.2012 அருட் தந்தை பீடட்ர்பால் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. திருமூலநகர் பங்கு நிலப்பாறை என்று காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. புனித ஜார்ஜியார் ஆலயதத்தில் பல புதுமைகள் நடந்ததால் அதிக மக்கள் வர தொடங்கினர். பல நோய்களிலிருந்தும் விடுதலை பெற்றனர். ஆகவே புனித ஜார்ஜியார் ஆலயம் திருத்தலமாக மாறியது. எம் பங்கின் வடக்காக உள்ள மலையடிவாரத்தில் ஆடு மேய்க்கச் சென்ற சிறுவர்கள் மேலே குகையில் சிலுவை வடிவில் ஒளித் தோன்றக் கண்டு ஊருக்குள் வந்து கூறினர். அப்போது ஆலய பணியாளராக இருந்த திரு. ஞானப்பிரகாசம் அவர்களும், மக்களும் இணைந்து சென்று பார்த்து வியந்து, இது இறைவனால் தெரிந்துக் கொள்ளப்பட்ட புனிதத்தலமாக கருதி கல்லால் ஆன சிலுவையை குகையில் வைத்து வணங்கினர். அன்று முதல் அந்த இடம் குருசுமலை என்று அழைக்கப்பட்டது. அதன்பின் தோமையார் சுரூபமானது அழகையில் இருந்து அருடத்ந்தை.ஜெபநாதன் அவர்களால் கொண்டுவரப்பட்டு குருசுமலையிலுள்ள குகையில்வைக்கப்பட்டது. பின்பு மக்கள் திருமூலநகரிலிருந்து குருசுமலைக்கு செல்வதற்கு வசதியாக அருட்தந்தை செல்வ ஜார்ஜ் அவர்களால் ஒத்தையடி பாதை போடப்பட்டது. பின்பு அவர்களால் இருசக்கர வாகனம் செல்வதற்கு வசதியாக திருமூலநகரிலிருந்து குருசுமலைக்கு செல்லும் வழி மண்பாதையாக இருந்ததை சீரமைத்து தார் ரோடு போட்டு மக்கள் சென்று வழிபட ஏதுவான தகுந்த வசதியையும் செய்தார்கள். பின்பு திருப்பலி நிறைவேற்ற அருட்தந்தை ததேயுஸ் ராஜன் அவர்களால் பலிபீடம் அமைக்கப்பட்டது. வாரத்தில் இரண்டு திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டது. மக்கள் அதிகம் பேர் நம்பிக்கையோடு வந்து வேண்டினர். நலமும் பெற்றனர். அதனால் புனித தோமையார் ஆலயம் திருத்தலமாக மாறியது. பின்பு மலை உச்சியில் 8 அடி உயரமான புனித தோமையார் சுரூபமானது வைக்கப்பட்டது. பின்பு திருமூலநகரானது தனிப்பங்காக மாறிய பின்பு முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்ற அருட்தந்தை .ஜோசப் ஸ்டார்லின் அவர்களால் மறைமாவட்ட நிதி உதவியுடன் பங்குத்தந்தை இல்லம் கட்டப்பட்டு மேதகு ஆயர் ஸ்டீபன் ஆண்டகை அவர்களால் 24.06.2019 அன்று புனிதப்படுத்தி திறந்து வைக்கபட்டது.

புனித தோமையார் சிற்றாலயம் முதலில் அருட்தந்தை ததேயுஸ் ராஜன் அவர்களால் கட்டப்பட்டது. அருட்தந்தை.பீட்டர் பாஸ்டியன் சே. பணியாற்றிய காலத்தில் கலப்பை மக்கள் இயக்க நிறுவனர், திரைப்பட டைரக்டர் திரு.P.T. செலவ்குமார் மூலமாகவும், திருப்பயணிகளின்நன்கொடை மூலமாகவும், நிலப்பாறை மக்கள் மூலமாகவும் புனித தோமையார் சிற்றாலயமும், மலைக்குகை மாதா கெபியும் கட்டப்பட்டு 23.01.2021 அன்று திரைப்பட நடிகர் திரு.விஜய் அவர்களின் தந்தை .திரு.சந்திரசேகர் திரைப்பட டைரக்டர் அவர்களால் திறக்கப்பட்டு, மேதகு ஆயர்ஸ்டீபன் ஆண்டகை அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

குருசுமலையிலிருந்து தெற்கு பார்க்கும் போது முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடல் தென்படுகிறது. தற்போது எங்கள் பங்குத்தந்தை பீட்டர் பாஸ்டியன் சே. அவர்களின் முழு முயற்சியாலும், மக்களின் ஒத்துழைப்பாலும் பழைய ஆலயம் இடிக்கப்பட்டு பெரிய ஆலயமாக கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது. மக்கள் மத்தியில் எம் பங்கானது இரட்டை திருத்தலமாக அழைக்கப்பட்டு வருகிறது. திருமூலநகரின் வளர்ச்சிக்கும், எழுச்சிக்கும் வித்தாக அமைந்த எம் பாசமிகு அருட்தந்தையர்களின் தன்னலமற்ற தியாகத்தை திருமூலநகர் இறைமக்களாகிய நாங்கள் நன்றியோடு நினைவு கூறுகின்றோம்.
எம் புனிதர்களை நாடி வாரீர்!
அவர்களின் அருளை பெற்று செல்வீர்!

Succession of parish priests:
1. Rev.Fr. Joseph Starlin - 2015 – 2020
2. Rev.Fr. Peter Pastian - 2020

Catholic Population : 700
No. of Catholic Families : 120

Sunday Mass – Timings : 5:00 a.m.
Thursdays at Crusu Malai : 5:00 p.m.
Fridays at St. George Chruch : Noveena + Mass 7:00 p.m.
Saturday : 7:00 p.m.
Weekdays : 5:30 a.m.

Grottos in the parish:
1. Malai Kukai Matha Grotto
2. St. Michael Grotto

Side Chapels :
1. St. Thomas Chapel (Kurusu Malai)

Participatory Structures
1. 4 Anbiyams
2. 15 Pastoral Commissions
3. Parish Pastoral Council

Christian Life Societies (Pious Associations)
1. Holy Childhood
2. Narkarunai Veerar Sabai
3. Theresa of Child Jesus Sodality
4. Amalorpava Matha Sodality
5. Legion of Mary
6. Holy Family Sodality
7. Vincent de Paul Society

Other Associations & Activities
1. Krithava Tholizhalar Iyyakkam
2. Prison Ministry

===============
New content in Tamil received through whatsapp in PDF format: Rev. Fr. Peter Pastian
Previous file name : parish-thirumulanagar-st-george0.htm
Updated on 3rd May 2023

 

image