St. Rita's Church
Rithammalpuram, Tuticorin
Parish Name : St. Reeta
Address : Rithammalpuram, Tuticorin - 628 003
Patron Saint : St. Rita
Brief History
The Parish of Ritammalpuram is consecrated to St.Rita. Ritammalpuram is bifurcated from Parish of Annanagar and establised as a new parish on 22nd May, 2018 by Most Rev.Dr. Yvon Ambroise D.D., Ph.D.
Rev.Fr. Arockiaraj D. was the first parish priest of the new parish. At that time there was no presbytery built in for the Parish. The parish priest was staying in Good News Centre, Pathinathapuram, Tuticorin. On completion of one year Rev.Fr. Irudayaraj Fernando F. suceeded him from June 2019. He stayed at Bishop's House. During his tenure of one year, the foundation for presbytery had been laid. Rev. Fr. Arokiam L. succeded as the third parish priest of Ritammalpuram from June 12th 2020. He was staying in Bishop's house until August 5th 2020. The construction of the new presbytery was compleeted on August 5th and was blessed by Most Rev.Dr. A. Stephen D.D. The Parish of Ritammalpuram has two substations namely "Chinnakannupuram" where the church has been consecrated to St. Antony and "Silverpuram" where the church has been consecrated to The Sacred Heart of Jesus. There are 78 families and 6 Anbiams and pious associations namely Legion of Mary, Holy Family, Immaculate Conception of Mary and St. Don Bosco youth at Ritammalpuram. Ther are 51 families and 3 Anbiams in Chinnakannupuram. Ther are 52 families and 3 Anbiams in Silverpuram. Rosarian convent and St.Lucia School for differently abled children are situated within the territory of the Parish of Ritammalpuram.
Succession of parish priests:
1. Rev.Fr. Arockiaraj D. 2018 - 2019
2. Rev.Fr. Irudayaraj Fernando 2019 - 2020
3. Rev.Fr. Arockiya Lazar 2020 -
பங்கின் வரலாறு:
தூத்துக்குடி மாநகராட்சியின் புதிய பேருந்து நிலையத்திலிருந்து மேற்கு நோக்கி 4 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள கிராமம் பண்டாரம்பட்டி. இந்து மக்கள் அதிகமாக வாழும் இப்பகுதியில் ஏழு தலைமுறைக்கு முன்னதாக ஒருசில குடும்பங்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு திருமுழுக்கு பெற்று கத்தோலிக்க விசுவாசத்தை கடைப்பிடித்தார்கள். இவர்களின் விசுவாசத்தை உறுதிப்படுத்த இவர்களுக்கென ஒரு ஆலயம் தேவைப்பட்டது. பொருளாதார நிலையில் எளியவர்களாக இருந்த இவர்களால் தங்களுக்கென ஆலயம் கட்டி எழுப்ப முடியாத சூழ்நிலையில் 1934 ஆம் ஆண்டில் திரு. ஜே.பி. ரோச் அவர்கள் புனித ரீத்தம்மாவுக்காக இப்பகுதியில் ஒரு ஆலயம் கட்டிக்கொடுக்க முன் வந்தார். புதிய ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு மேதகு ஆயர் ரோச் அவர்களால் திறக்கப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது. அதன் பிறகு இம்மக்களின் ஆன்மீகத் தேவைக்காக இவர்கள் தூத்துக்குடி புனித சார்லஸ் ஆலயப் பங்கோடு இணைக்கப்பட்டார்கள். பத்தினாதபுரம் புனித யூதா ததேயு ஆலயம் புதிய பங்காக உருவாக்கப்பட்டபோது அப்பங்கின் இணையூர்களில் ஒன்றாக இவ்வூர் உருவாக்கப்பட்டது. மீண்டும் இவ்வூர் புனித சார்லஸ் ஆலயப் பங்கோடு இணைக்கப்பட்டு அன்னாநகர் புனித மிக்கேல் ஆலயம் புதிய பங்காக உருவானபோது அவ்வரோடு இணைக்கப்பட்டது.
மக்களின் வழிபாட்டிற்காகக் கட்டப்பட்ட முதல் ஆலயம் பழுதடைந்த நிலையில் அப்போதைய அண்ணா நகர் பங்குத் தந்தை அருள்தந்தை. புருனோ அவர்கள் புதிய ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டி ஆலயப் பணிகளுக்கான தொடக்க வேலைகளைச் செய்தார். அவர்களுக்குப் பிறகு அருள் தந்தை மைக்கிள் ஜெகதிஸி அவர்கள் அன்னாநகர் பங்கின் பங்குத் தந்தையாக பொறுப்பேற்றதும் இவ்வாலயப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டன. மக்களின் முழுமையான உழைப்பின் காரணமாக இவ்வாலயப் பணிகள் நிறைவுபெற்று 2006 ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் தேதி மேதகு ஆயர் இவோன் அம்புரோஸ் அவர்களால் திறக்கப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது. மறைமாவட்டத்தின் நலனுக்காக எப்பொழுதும் ஜெபிப்பதற்காக புனித செபமாலை அன்னை சபை சகோதரிகளுக்கு இப்பகுதியில் ஒரு துறவு மடம் கட்டிக்கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரீத்தம்மாவை பாதுகாவலியாகக் கொண்டு இங்குள்ள கிறிஸ்தவ மக்கள் வாழ்ந்ததால் பண்டாரம்பட்டி என்று பொதுப்பெயர் கொண்ட கிராமத்தில் இருந்தாலும் தங்களை ரீத்தம்மாள்புரம் கிராம மக்கள் என்று அழைப்பதில் பெருமை கொண்டார்கள்.
இம்மக்களின் ஆன்மீக வாழ்வில் வளர்ச்சியைக் கொண்டு வருவதறக்கு இவ்வூர் தனிப்பங்காக இருந்தால் நன்றாக இருக்கும் என்பதனால் அருள்தந்தை பென்சன் அவர்கள் மறைமாவட்ட நிர்வாகத்திற்கு அதற்கான பரிந்துரை கடிதத்தை அளித்தார்கள். இதற்கென குழு அமைக்கப்பட்டு விரிவாக ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு அன்னாநகர் பங்கிலிருந்து இவ்வூரை தனிப்பங்காக மாற்றுவதற்கான பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டது. 4ஆம் கேட்டுக்கு மேற்கே தூத்துக்குடி திருநெல்வேலி இரயில்வே தண்டவாளத்திற்கு வடக்கு பகுதியில் உள்ள சின்னக்கன்னுபுரம், சில்வர்புரம், ரீத்தம்மாள்புரம் ஆகிய கிறிஸ்தவ கிராமங்களை உள்ளடக்கி 22.05.2018 புனித ரீத்தம்மாள் ஆலயத்தில் மாலையில் மேதகு ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டுத்திருபலியில் புதிய பங்காக அறிவிக்கப்பட்டது. இதன் முதல் பங்குத் தந்தையாக அருள்தந்தை ஆரோக்கியராஜ் அவர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
புனித ரீத்தம்மாள் திருவிழா : மே 22
ஞாயிறு திருப்பலி நேரம் : காலை 9.30 மணி
வாரநாள் திருப்பலி நேரம் : மாலை 7 மணி
பங்கின் பக்த சபைகள்
1. மறைக்கல்வி மன்றம்
2. பீடப் பூக்கள்
3. அமல உற்பவ அன்னை இளம் பெண்கள் சபை
4. டொன் போஸ்கோ இளையோர் இயக்கம்
5. திருக்குடும்ப சபை
6. மரியாயின் சேனை
7. புனித சூசையப்பர் சபை
பங்கின் அன்பியங்கள்
1. புனித சவேரியார் அன்பியம்
2. புனித ரீத்தம்மாள் அன்பியம்
3. புனித தோமையார் அன்பியம்
4. புனித அல்போன்சா அன்பியம்
5. அன்னை வேளாங்கண்ணி அன்பியம்
6. புனித அன்னை தெரசா அன்பியம்
பங்கின் இணை ஊர்கள் :
சின்னக்கண்ணுபுரம்
1950 களில் பனைத் தொழில் செய்வதற்காக தமிழகத்தின் தென்பகுதி கிராமங்களிலிருந்து குறிப்பாக சி.சவேரியார்புரம், கடகுளம், மிட்டாதார்குளம், சில்பாடு சவேரியார்புரம், காமநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களில் வாழ்ந்த மக்கள் சின்னக்கண்ணுபுரம் பகுதியில் ஒருசில முதலாளிகளால் குடியமர்த்தப்பட்டார்கள். இவர்களை குடியமர்த்திய முதலாளிகளே இவர்களுக்கான வழிபாட்டு இடம், கல்லறைக்கான இடம் என வழங்கினார்கள். 1984 ஆம் ஆண்டு புனித அந்தோனியாருக்காக ஒரு ஆலயம் கட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து புதிய கொடிமரமும், புனித அந்தோணியார் கெபியும் அருள்தந்தை ஜெகதிஸ் அவர்களின் முயற்சியாலும் மக்களின் முயற்சியாலும் கட்டப்பட்டது. அருட்பணி. ஜான் பென்சன் காலத்தில் ஆலயம் புதிப்பிக்கப்பட்டது.
பாதுகாவலர் : புனித அந்தோனியார்
திருவிழா : ஜனவரி மாதம்
ஞாயிறு திருப்பலி நேரம் : காலை 6.30 மணி
செவ்வாய் கிழமை
வாரநாள் திருப்பலி நேரம் : மாலை 6.30 மணி
சில்வர்புரம்
சாயர்புரம், அருளானந்தபுரம், பரமன்குறிச்சி ஆகிய ஊர்களிலிருந்து நெசவுத் தொழில் செய்த கிறிஸ்தவர்கள் 9 தலைமுறைகளுக்கு முன்னதாகவே இவ்வுரில் வந்து குடியேறினர். 1935 ஆம் ஆண்டு இம்மக்களின் விசுவாச வளர்ச்சிக்காக இயேசுவின் திருஇருதய ஆலயம் கட்டப்பட்டு மேதகு ஆயர் ரோச் அவர்களால் திறந்து அர்ச்சிக்கப்பட்டது. காலப்போக்கில் இவ்வாலயம் பழுதடைந்த காரணத்தால் புதிய ஆலயம் கட்ட தீர்மானிக்கப்பட்டது. அருள்தந்தை அகஸ்டின் அவர்களின் காலத்தில் புதிய ஆலயப்பணிகள் தொடங்கப்பட்டன. அருள் தந்தை மரியதாஸ் லிப்டன் அவர்களின் காலத்தில் இவ்வாலயம் கட்டிமுடிக்கப்பட்டு ஆயர் மேதகு இவோன் அம்புரோஸ் அவர்களால் 2014 மே மாதம் 17ஆம் நாள் ஆலயம் புனிதப்படுத்தப்பட்டது.
இயேசுவின் திரு இருதயம் திருவிழா : மே மாதம்
ஞாயிறு திருப்பலி நேரம் : காலை 7.30 மணி வாரநாள் திருப்பலி நேரம் - மாலை 7 மணி (வெள்ளிக் கிழமை)
பங்கின் நிறுவனங்கள்
1. புனித லூசியா மாற்றுத்திறனுடையோர் பயிற்சிப்
பள்ளி, மீளவிட்டான்
'2. புனித செபமாலை அன்னை கன்னியர் இல்லம், ரீத்தம்மாள்புரம்
(பங்கின் குடும்ப கையேட்டிலிருந்து)
===============
New Info provided by : Fr. Arockian L.
Scanned page: None, Previous file name :parish-reethamalpuram-tuty0.htm
Updated on 13th Oct. 2022
|