image
image
image

St. Xavier's Church
Rathinapuram, Tuticorin

as

as

Parish Name : St. Xavier’s Church
Address : Rathnapuram, Tuticorin 628 001
Patron Saint : St. Xaiver’s
Telephone No : 0461 – 2328650

A Brief History:

தென் தமிழகத்தில் அமைந்துள்ள கோட்டாறு. பாளையங்கோட்டை, தூத்துக்குடி ஆகிய மூன்று மறைமாவட்டங்களுக்கும் புனித சவேரியாரே ஆனால், சிறப்புப் பாதுகாவலராவார். பாளையங்கோட்டை, கோட்டாறு மறைமாவட்ட ஆசன ஆலயங்கள் புனித சவேரியாரின் பெயர் கொண்டே அழைக்கப்படுகின்றன. புனித சவேரியார் அதிக அளவில் மறைபரப்புப் பணிபுரிந்த தூத்துக்குடியில் சவேரியாருக்கென்று தனி ஆலயம் எதுவும் இல்லாமல் இருந்தது. இக்குறையை நீக்கியது இரத்தினபுரம், புனித சவேரியாரின் ஆலயமாகும்.

1920 ஆம் ஆண்டு ஆசன பங்குத்தந்தையான அருட்பணி மார்டின் சே.ச சுவாமிகள், இந்த இடத்தில் இப்பகுதி கிறிஸ்தவ மக்களுக்கென்று, ஒரு சிறிய ஜெபக்கூடத்தைக் கட்டி முடித்தார்கள். இரவு நேரங்களில் மக்கள் ஒன்று கூடி இராச் செபம் நடத்தி வந்தார்கள். ஞாயிறு தோறும் மாலையில் ஆசன ஆலய வின்சென்ட் தே பவுல் சபையினர் மறைக்கல்வி வகுப்பு நடத்தி வந்தார்கள். (1943 ஆம் ஆண்டு இம்மறைக்கல்வி வகுப்புகளில் பங்கேற்று, சரியாய் வந்திக்கத்தக்க பிரான்சீஸ் திபூர்சியஸ் ஆண்டகை கைகளில் நான் பரிசு பெற்றது நினைவில் நிற்கிறது.)1922 ஆண்டு ஆசன ஆலய பங்குத் தந்தையான மரிய சூசை நாதர் இந்த ஜெபக்கூடத்தில் இரு ஆசிரியர்களையும், மூன்று வகுப்புகளும் கொண்ட ஆரம்பப்பள்ளியையும் ஆரம்பித்தார்கள்.

1956 ஆம் ஆண்டு ஆசன ஆலயப் பங்குத்தந்தையாகப் பணிபுரிந்த அருட்திரு பெனடிக்ட் தந்தையவர்கள், தவக்காலம் 4-வது வெள்ளிக்கிழமையன்று அவருடைய கனவில் புனித சவேரியார் தோன்றினார். அக் கனவில் புனித சவேரியார் "நான் மறைபரப்பிய தூத்துக்குடி மண்ணில் எனக்கென்று என் நினைவாக எனது பெயரில் ஓர் ஆலயம் இல்லையே! நீ கட்டி முடிப்பாயா? எனக் கேட்டார். மறுநாள் சனிக்கிழமை அதிகாலையில் தந்தையவர்கள். இப்பகுதிக்கு விரைந்து வந்து இப்பகுதியின் பெரியவர்களை அணுகி, நாளை ஞாயிறு முதல் பிரதி ஞாயிறு தோறும் காலை 7 மணிக்கு திருப்பலி நடைபெறும் என்று அருட் பெருந்தந்தை ஆயர் தாமஸ் ஆண்டகை அனுமதியுடன் வெளியிட்டார். அப்பெரியவர்கள் மூவரும் பள்ளிச்சிறுவர்கள் கையில் ஒரு கைமணியைக் கொடுத்து, ஓசையை எழுப்பி திருப்பலி பற்றிய அறிவிப்பை மக்களுக்குத் தெரிவித்தார்கள். மக்களும் மகிழ்வுடன், ஞாயிறு தோறும் திருப்பலியில் பங்கேற்று வந்தார்கள். 1962-ல் ஆசன ஆலயப் பங்குத்தந்தையான அருட்பணி மரிய அல்போன்ஸ் காகு, பள்ளியும், ஆலயமுமாக விளங்கியக் கட்டிடத்தை இடித்துவிட்டு, இன்று நாம் காணும் பள்ளிக் கட்டிடமாக புதிதாகக் கட்டினார்கள் எனவே, இதுவரை நடந்து வந்தத் திருப்பலி இல்லாது போயிற்று. இப்பகுதி கிறிஸ்தவர்கள் மீண்டும் ஆசன ஆலயத்திற்குப் படையெடுக்கும் நிலை தோன்றியது.

அருட் பெருந்தகை மேதகு தாமஸ் ஆண்டகை இப்பகுதியைத் தனி பங்காக மாற்ற விரும்பியபோது, திரு. சூசை மரியான் பூபாலராயர் அவர்களால், இன்றையத் தேவாலயம் இருக்கும் இடம் நன்கொடையாகக் கொடுக்கப்பட்டது. அருட்தந்தை லாம்பர்ட் மிராண்டா அவர்களது முயற்சியின் பலனாக 1973 ஆம் ஆண்டு மேதகு ஆயர் அம்புரோஸ் ஆண்டகை புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார்கள். 1974 ஆம் ஆண்டு ஆசன ஆலயப்பங்குத் தந்தையான ஸ்டீபன்தாஸ் சுவாமிகள் சக்ரீஸ்தர் பகுதியையும், பீடப் பகுதியையும் கட்டி, ஆலயப் பணியை ஆரம்பித்து வைத்தார்கள். 1976 ஆம் ஆண்டு பங்குத்தந்தை அருட்திரு S.கபிரியேல் அடிகள் சுற்றிலும் காம்பவுண்டு சுவர் எழுப்பி பாதுகாப்பின்றி இருந்த இடத்திற்குப் பாதுகாப்புக் கொடுத்தார்கள்.

இப்போது பெரியவர்களிடமிருந்த ஆலயப் பொறுப்பை இளைஞர்கள் ஏற்றுக்கொண்டனர் இப்பகுதி இளைஞர்கள் மற்றும் பல இளைஞர்கள் ஒருங்கிணைந்து ஆலயம் கட்டும் பணியை முடுக்கிவிட்டு, ஆலயத்தைக் கட்டி முடிக்க பெரும் உதவியாக இருந்தனர். 1984 ஆம் ஆண்டு அருட்பணி ஜோசப் டிரோஸ் ஆசன சன ஆலயப் பங்குதந்தையாக வந்தபோது, அவர்களது தீவிர முயற்சியால் 1987 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி புனித சவேரியார் ஆலயம் அருட்பெருந்தகை S.T.அமலநாதர் ஆண்டகை அவர்களால் திருநிலைப்படுத்தப்பட்டது.

பின்பு இப்பகுதி இளைஞர்கள் ஆயர் அவர்களை அடிக்கடி சந்தித்து, இரத்தினபுரத்தை தனிப்பங்காக ஏற்படுத்தினால், பங்குப் பொறுப்பை இரத்தினபுரம் கிறிஸ்தவர்களே பொறுப்பேற்றுக்கொள்ளுவோம் என உறுதியளித்து, புதிய பங்கு தோன்ற முன்னேற்பாடு செய்தார்கள். 1990 ஆம் ஆண்டு அருட்பணி S.ஜெரால்ட் பொறுப்புத் தந்தையாக (incharge) இருந்து தினசரி திருப்பலியையும் திருவருட்சாதனங்களையும் நிறைவேற்றி, பங்கு தோன்றுவதற்கு முன்னேற்பாடாக விளங்கினார்கள். இதே சமயத்தில் முதன்மைக் குருவாக இருந்த லாம்பர்ட் மிராண்டா அவர்களது தலைமையில் பங்குத்தந்தை இல்லத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு கட்டிடப்பணியும் தொடங்கியது.

1992 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் நாள் இரத்தினபுரம் புதிய பங்காக உதயமாகி, அருட்பணி S.கபிரியேல் அடிகள் முதல் பங்குத்தந்தையானார்கள். 1993 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி அருட்தந்தை பவுல் ராபின்ஸ்டன் இரண்டாவது பங்குத் தந்தையானார்கள். இவர்களது காலத்தில் கன்னியர்கள் இல்லத்திற்கு அடிக்கல் இடப்பட்டது. 1995 ஆம் ஆண்டு ஜூன் 4-ம் தேதி மூன்றாவது பங்குத்தந்தையாக அருட்திரு இருதயராஜ் அடிகள் பொறுப்பேற்றார்கள். இவர்களது ஆளுகையின் போது, 31.07.1996-ல் பேரருட்திரு | ஆயர் S.T.அமலநாதர் கன்னியர்கள் இல்லத்தை மந்திரித்துத் திறந்தார்கள். நான்காவது பங்குத்தந்தையான அருட்பணி ஜோசப் இரத்தினராஜ் சுவாமிகள் 1998 முதல் 2000 வரை பணிபுரிந்தார்கள். இவர்கள் சவேரியாருக்கென்று தனிப்பீடமொன்று கட்டித்தந்தார்கள். அவர்கள் மாற்றம் பெற்றபோது ஐந்தாவது பங்குத்தந்தையான 'இன்னிசைவேந்தன்' அருட்பணி. டென்னிஸ் வாயிஸ் பொறுப்பேற்றார்கள். இவர்களது காலத்தில் குழந்தை இயேசுவிற்காகத் தனிப்பீடம் அமைக்கப்பட்டது. ஆலயத்தின் உட்புறத்தின் மேற்கூரை (Sealing) முடிக்கப்பட்டு, அருட்பணி முன்னாள் பங்குத்தந்தை இரத்தினராஜ் அர்ச்சித்து திறந்தார்கள். அருட்பணி டென்னிஸ் வாயிஸ் மாற்றம் பெற்றபோது மக்களால் "பப்பா" என்று பாராட்டுப்பெற்ற அருட்பணி ஜோசப்டிரோஸ் 6-வது பங்குத்தந்தையென 2003-2006 வரை பணியாற்றினார்கள். இவர்களது பணிக்காலம் இரத்தினபுரம் பங்கிற்கு விடிவெள்ளி எனப்படும். ஏனெனில், சவேரியார் ஆலயம் முன்னேற்ற ஏணியில் முன்னேறிய காலம் 02.12.2004-ல் ஆலயத்திற்கு முன் மண்டபம் கட்டி மேதகு பீற்றர் பர்னாந்து D.D. அவர்களால் ஆசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டது.

'கோவிலுக்கு அழகு கோபுரம்' என்பது பழமொழி. இதற்கேற்ப மணி தாங்கிய ஒரு சிறிய கோபுரத்தை அந்த நாள் முதன்மைக்குரு பேரருட்திரு ஜோசப் இரத்தினராஜ் அவர்கள் 01.05.2005 அன்று ஆசீர்வதித்து திறந்தார்கள். புதிய கொடிமரத்தில் 24.11.2005 அன்று மறைவட்ட முதன்மை தந்தை அருட்திரு. இக்னேஷியஸ் அமலதாஸ் முதன் முதலாக கொடியேற்றி திருவிழாவை ஆரம்பித்தார்கள். ஏழைகள் திருமணங்கள் நடத்துவதற்கென்று அருட்தந்தை ஜோசப்டிரோஸ் அவர்கள் குறைந்த வாடகையில் திருமண மண்டபம் ஒன்றை அமைத்து உதவினார்கள். அருட்தந்தை ஜோசப்டிரோஸ் அதிக அளவில் நற்பணிகளை நிறைவேற்றி தனது குருத்துவ பொன்விழாவையும் இங்கேயே கொண்டாடினார்கள். பொன்விழா நாயகனாக 2006 ஆம் ஆண்டு சிறுமலர் குருமடத்திற்கு, துணை அதிபராகவும் ஆன்மீகத் தந்தையாகவும் மாறுதல் அடைந்தார்கள்.

2006 முதல் 2009 வரை அருட்பணி பவுல்ராபின்ஸ்டன் இரண்டாவது தடவையாக மீண்டும் பணிபுரிய வந்தார்கள் இம்முறை திவ்விய நற்கருணைப் பெட்டகத்தை புதிய நவீனமுறையில் மாற்றினார்கள். (2009 ஜூலை மாதம் பழையகாயலுக்கு மாறுதல் பெற்றுப் போனார்கள். 2009 ஜூலை 19 ஆம் நாள், அருட்பணி C.சகாய லூட்ரின் தந்தை 8-வது பங்குத் தந்தையாக பொறுப்பு ஏற்றார்கள். பொறுப்பேற்றவுடனே மாத இறுதியில் சனியன்று முழு இரவு ஜெபமும் பிரதி வியாழன் மாலையில் புனித சவேரியார் நவநாள் திருப்பலியும் நிறைவேற்றிவருகிறார்கள். இவ்விரு பக்தி முயற்சிகளுக்கும் மற்ற பங்குகளிலிருந்தும் திராளான மக்கள் வருகைதந்து ஆசீர் பெற்றுப்போகின்றனர். 'ரத்தினமலர்' என்ற மாதப் பத்திரிகையில், மக்களின் பிறந்த நாள், திருமண நாள்களை அறிவித்து வாழ்த்துகளையும் ஆசீரையும் தருகின்றார்கள். சிலுவைப்பாதைப் படங்களை மாற்றியதோடு தவக்காலங்களில் ஆலய வளாகத்தில் கெத்சமெனித்தோட்டம் கல்வாரிப் பாதைகளை அமைத்து வளாகத்தை (HOLY LAND) புனித புனித பூமியாக மாற்றி வருகின்றார்கள் புதிய சப்பரம் ஒன்று செய்து முக்கிய திருநாட்களிலும் சவேரியார் திருவிழாவின்போதும், வீதிகள் வழியாக வலம் வரச்செய்து, சப்பரம் இல்லையே! என்ற குறையையும் நீக்கினார்கள். 2011 ஆம் ஆண்டுத் திட்டத்தில் மிக உயரமான கண்கவர் லூர்து அன்னைக்கொரு கெபி கட்டிமுடிக்கப்பட்டு முதன்மைக் குரு பேரருட்திரு அண்ட்ரூ டிரோஸ் அடிகள் திறந்து வைத்தார்கள். இக்கெபியின் விசேசம் மாதாவின் சுரூபம், ஆலய்த்தின் உட்பகுதியிலும், தெருவின் பக்கமாகவும் இ இரு சுரூபங்கள், காட்சி தருகின்றார்கள். ஆலயத்திற்கு வெளியே, தெருவின் பக்கமாக உள்ள மாதாவிற்கு அதிகாலையில் வீதிவழியே போகும் பால்வியாபாரிகளும், இந்துக்களும், முஸ்லீம்களும் பிரிவினைச் சபை சகோதரர்களும் கூட வழிபட்டு வணக்கம் செலுத்தி, தங்கள் பணிகளைத் தொடங்குவதைக் காண்கின்றோம். வேதாகம விழாவன்று, இரத்தினபுரம் பாடசாலை வேதகாமமாகக் மாறிய ஒரு கண்காட்சியை பாராட்டதவர்கள் எவருமில்லை. இக்கண்காட்சியை பல பங்குமக்களும், குருக்களும் கன்னியர்களும் கண்டுகளித்து பாராட்டினார்கள். அன்பிய மக்கள் மக்களை உற்சாகப்படுத்தி, பங்கு முழுவதுமே ஒரே குடும்பமாக செயல்படுகிறது.

வெள்ளிவிழாக் காலத்தில் நமது பாடசாலையையும் மறக்க இயலாது. ஏனெனில், லய முன்னேற்றத்திற்கு பள்ளிக்கூடமும் உதவி செய்து வருகின்றது. மூன்று முக்கியமான தலைமை ஆசிரியர்களைப் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவிக்க கடமையுண்டு * 6.) மிகச்சிறிய தொடக்கப்பள்ளியாக இருந்ததை 1958 ஆம் ஆண்டு உயர்தர ஆரம்பப் பள்ளியாக 16,7,8, வகுப்புகள்) மாற்றி, நமது தெருவில் புகழாரம் பெற்றார்கள். நமது நகரத்தில் நற்புகழ்பெற்ற நடுநிலைப்பள்ளியாக உயர்த்தினார்கள். இவ்வளாகத்தில் அமைந்துள்ள நிழல்தரும் வேப்பமரங்கள் அவரது புகழைப்பாடி காற்றில் நடனமாடிக் கொண்டிருக்கின்றன. அருட்தந்தை சகாயலூட்ரின் மூன்றுமாத முயற்சியில் உயர்நிலைப் பள்ளியாக உயர்த்தினார்கள். இது ஒரு மாபெரும் சாதனை. மேலும் மேல்நிலைப் பள்ளியாக மேலோங்க வாழ்த்துகிறோம். இப்பங்கின் இளைஞர் இயக்கம் மறைமாவட்டத்தில் சிறப்பான பெயருடன் பங்கின் முன்னேற்றத்திற்கு பாடுபடுகிறது.

கடந்த 25 ஆண்டு காலமாக வழிநடத்தி, வெள்ளி விழாவை சிறப்பாக முடிப்பதற்கு அருள்புரிந்த இறைவனுக்கு நன்றி. கோட்டாறு மறைமாவட்ட ஆயர் மேதகு பீற்றர் ரெமிஜியூஸ் ஆண்டகை வெள்ளிவிழா நினைவாக, திருத்தி அமைக்கப்பட்ட திருப்பலி பீடத்தை அர்ச்சித்தார்கள். 24.11.12 அன்று கொடியேற்றி வெள்ளிவிழாவை ஆரம்பித்து வைத்தார்கள். இன்றைய ஆயர் மேதகு யுவான் அம்புரோஸ் ஆண்டகை அடிக்கடி இப்பகுதிக்கு வருகை தந்து ஆலோசனை வழங்கியதோடு மட்டுமன்றி, வெள்ளிவிழாவின் போது திருப்பலி நிறைவேற்றி, முதல் திருவிருந்து திருவருட் சாதனத்தையும் நிறைவேற்றித்தந்தார்கள். பேரருட் பெருந்தகை பேராயர் பீற்றர் பர்னாந்து அவர்கள் வெள்ளிவிழா நிறைவுத் திருப்பலியை நிறைவேற்றி உறுதிப்பூசுதல் திருவருட்சாதனத்தையும் நிறைவேற்றினார்கள். பேரருட்திரு முதன்மைக்குரு ஆண்ட்ரூஸ் அடிகள், வெள்ளிவிழாவிற்கு பாப்பரசர் அனுப்பிய வாழ்த்துச் செய்தியை வாசித்து நிறைவு செய்தார்கள்.

பங்கின் வளர்ச்சியும் எழுச்சியும்
நம் ஞானத்தகப்பன் புனித சவேரியார், கடலோர பகுதிகளில் கால்நடையாக கிறிஸ்தவ விசுவாசத்தை வளர்த்த அவரின் பெயரில் ஆலய வெள்ளிவிழா கண்டு மகிழ்ச்சி அடைகிறோம்.

ஓங்கி வளர்ந்த பனைமரங்கள் நிறைந்த பனங்காட்டுப் பகுதியில், ஓட்டு அடுக்கு கட்டிடத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஆலய வழிபாடு, இன்று குன்றின் மேல் வைத்த விளக்காகப் பிரகாசிப்பது கண்டு பேருவுகை கொள்கிறோம்.

எம்பகுதி பெரியவர்கள், எழுச்சி கொண்ட இளைஞர்களின் தீவிர முயற்சியால் பனங்காட்டுப் பாலைவனமாக, முட்புதராக இருந்த எம்பகுதி இன்று அடர்ந்த மரங்கள் நிறைந்த சோலையாக காட்சி அளிப்பது கண்டு பெருமை கொள்கிறேன்.

1973-ம் ஆண்டு அருள்தந்தை லாம்பர்ட் மிராண்டா அவர்கள், எம்பங்கு பெரியவர்கள். எழுச்சி மிகுந்த இளைஞர்களின் ஆலயம் எழுப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஆலயத்திற்கு ஆயர் அம்புரோஸ் ஆண்டகை அவர்களால் அடிக்கல் நாட்டி அஸ்திவாரம் இடப்பட்ட ஆலயப் பணி அத்துடன் முடங்கி நின்றது.

1974 முதல் 1984 வரை 10 ஆண்டுகளுக்கு மேலாக முடங்கப்பட்ட ஆலயக் கட்டுமானப் பணி தொடர்வதற்கு, எம்பகுதி பெரியவர்கள் ஆலய கட்டிடப் பணிக்கு குழு என்று இளைஞர்கள் கத்தோலிக்க இளைஞர் இயக்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி, பள்ளி கட்டிடத்தில் நடந்த ஞாயிறு திருப்பலி, ஆண்டு புனிதரின் பெருவிழாவிலும், மறைமாவட்ட ஆயரையும், ஆசன ஆலய பங்கு தந்தைகளையும் தொடர்ந்து விடாமுயற்சியுடன் வலியுறுத்தியதின் விளைவாகவும், அருள்தந்தை ஜோப் டீரோஸ் எம்பகுதி மக்களுடன் இணைந்து ஆலயத்தை கட்டி முடித்து, ஆயர் அமலநாதரின் திருக்கரத்தால் அர்ச்சிப்பு செய்த நாளில் இளையோர் ஆர்ப்பரித்து ஆனந்தம் அடைந்தோம்.

நமது பாதுகாவலருக்கு ஆலயம் அமைந்தது. ஆனால், பங்கு உருவாக்கப்பட்ட சிரமங்கள் சொல்லில் அடங்கா. எம்பகுதி பெரியோர், இளையோரின் தீவிர செயல்பாட்டால் பங்கு உருவானது. இன்று எட்டாவது பங்குத்தந்தை அருள்பணி C.சகாய லூட்ரின் தலைமையில் ஆலயம் வெள்ளி விழா காண்பதில் பெருமிதம் கொள்கிறோம்.

முன்னாள் பங்கு தந்தையர்களுடன் இணைந்து ஆற்றிய பணிகள்:
2-வது அருட்தந்தை பவுல் ராபின்ஸ்டன் பணி காலத்தில் நமது மறைமாவட்டத்தின் பரிந்துரையின்பேரில் வெளிநாட்டு நிதி உதவி மற்றும் நம் பங்கு மக்கள் பங்களிப்புடன் சமுதாய கூடம் அமைப்பதற்கான பணிக்காக சேமித்து வைக்கப்பட்ட ரூ.9,00,000/- (ஒன்பது இலட்சம்) நிதியினைக் கொண்டு நம் பள்ளிக்கு புதிய கட்டிடம் தரைதளம் மட்டுமாகக் கட்டிடம் அமைத்தோம்.

அருட்தந்தை டென்னிஸ் வாய்ஸ் பணிக் காலத்தில் நம் பங்கு மக்களின் பங்களிப்பான கல்விநிதிக்காக வைப்புத் தொகையாக நமது மறைமாவட்டத்தில் சேமித்து வைக்கப்பட்ட 2,50,000/- ( இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம்)-த்துடன் மறைமாவட்டத்தின் நிதி ஆதாரத்துடன் சேர்த்து நம் பள்ளிக்கு முதல் தளம் கட்டிடம் அமைத்தோம்.

6-வது பங்குத்தந்தை ஜோப் டீரோஸ் அவர்களின் பெரும் முயற்சியால் ஆலய மண்டபம் அமைத்தோம். கோபுரம், கொடிமரம் அமைத்தோம். பள்ளி ஆசிரியர்கள் உணவு அருந்த கூடம் அமைத்தோம்.

பங்கு மேய்ப்புப் பணிக்குழுவும் ஆலயம், பள்ளி வளர்ச்சியும்:
பொதுநிலையினர் பங்கேற்கும், பங்கு நிர்வாகம் ருவாக எம்பகுதி பெரியோர்கள், அன்றைய பங்குத்தந்தை பவுல்ராபின்ஸ்டன் அவர்களின் ஒப்புதலுடன் அமைந்த பங்கு நிர்வாகக் குழு அருள்தந்தை C.சகாய லூட்ரின் தலைமையில் ஆற்றிய பணி எம் பங்கு வளர்ச்சிக்கு ஒரு மைல்கல். எம் பங்குத்தந்தை பங்கு நிர்வாக பொறுப்பாளர்களுடன் சேர்ந்து ஆண்டுக்கு ஏழு இலக்குகளைக் குறிப்பிட்டு ஆற்றிய பணி அதிசயிக்க வைத்தது.

எம் பள்ளி உயர்நிலைப் பள்ளியாக உயர்ந்தது:
எம் பங்குத்தந்தை அவர்களும், பங்கு நிர்வாக பொறுப்பாளர்களும் ஒருங்கிணைந்து, அருள் தந்தையர் பலர் அச்சம் காட்டிய போதும், நெஞ்சுறுதியுடன் நின்று, ஆசிரியப் பெருமக்களின் உதவியுடன் 10,00,000/- (பத்து இலட்சம்) பங்கின் பெயரில் R.C. பள்ளி நிர்வாகத்தில் சேமிப்பு வைத்து, உயர்நிலைப் பள்ளியாக உயர்த்தியது மட்டுமா, முதல் ஆண்டே தேர்வில் 100% வென்று காட்டிய சாதனை கண்டு பெருமிதம் கொண்டோம். தொலைதூரத்திலிருந்து எம் பள்ளியின் கல்வி உயர்வைக் கண்டு எம் பள்ளிக்கு வரும் மாணவச் செல்வங்களை அழைத்து வர பள்ளிக்கென தனியான வாகனங்களை சொந்தத்தில் ஏற்பாடு செய்து சிறந்த கல்விக்கு வித்திட்ட எம்பள்ளியை அதன் தாளாளர் அருள்திரு. C.சகாய லூட்ரின் நிர்வாகத் திறமை கண்டு பெருமிதம் கொள்கிறோம்.

அன்னைக்கு ஓர் அற்புத கெபி:
எம் பங்கு மக்களின் உள்ள உணர்வுகளை உணர்ந்து, அன்னைக்கு ஓர் கெபி அமைக்க எம் பங்குத்தந்தை ஆண்டு இலக்குகளில் ஒன்றாக, அன்னைக்கு கெபி அமைக்க பங்கு நிர்வாகிகளும், இட்ட திட்டத்திற்கு தாராளமாக உதவிட்ட பங்கு மக்களையும், அதனால், உருவான அற்புதக் கெபியை பிற பங்கு மக்களும், பிற சமய மக்களும் அதிசயித்துப் பாராட்டுவது கண்டு பெருமிதம் கொள்கிறோம்.

சுற்றுப்புறச் சூழல் இயற்கை தேவை:
எம் பள்ளி ஆசிரியர்கள், மாணவச் செல்வங்கள் சுற்றுப்புற சூழல் கொண்ட இயற்கைத் தேவைகளை உணர்ந்து, நவீன வசதிகளுடன் கழிப்பறைகளை அமைத்துக் கொடுக்க, பங்கில் நிதி இருக்கிறதோ இல்லையோ, திட்டமிடுங்கள் என பங்கு நிர்வாகிகளை தூண்டி, சிறப்புடன் செயலாற்ற அன்பு வழிகாட்டிய அருள்தந்தையின் மக்கள் நலன் கண்டு பெருமிதம் கொள்கிறோம்.

அழகு சேர்க்கும் திருப்பலி பீடம், ஆலயச் சுற்றுச்சூழல்:
வெள்ளிவிழா எப்படி கொண்டாடுவது, பங்கு நிர்வாகத்தில் நிதி ஆதாரம் இல்லாத நிலை, ஆனால், எம் பங்குத்தந்தை இறை வார்த்தையை (மத். 10:10) உள்ளத்தில் நிறுத்தி, பங்கு மக்கள் மீது கொண்ட நம்பிக்கையில், பங்கு நிர்வாகக் குழுவுடன் சேர்ந்து திட்டமிட்டார். வெள்ளிவிழாவிற்கு அழகு சேர்க்கும் வகையில் திருப்பலி பீடம் அமைந்தது. புனிதரின் திருவுருவச் சுரூபமும், பீட அலங்கார விளக்குகள் அமைத்து பெருமிதம் கொண்டோம். ஆலத்தின் நுழைவு வாயிலில் கண்கவர் பூந்தொட்டிகள், குரோட்டன்ஸ் அமைப்புகள் ஆலயச் சுற்றுச்சூழலுக்கு அழகு சேர்த்தது கண்டு பெருமை கொள்கிறோம்.

எத்தனை அழகு சேர்த்தாலும், ஆலயத்தின் மின் தடையா அது போக்கப்பட வேண்டும் என கண்டு, ஒளிவெள்ளம் ஆலயம் முழுக்க பிரகாசிக்க, அதிக மின் அழுத்த மோட்டார் பொருத்தி ஆலயத்தை அழகு பார்த்தது கண்டு பெருமை கொள்கிறேன். ஆலய வழிபாட்டிற்கும், பள்ளிக்கும் வடபகுதியிலிருந்து வருகின்ற மக்களுக்கும், பள்ளி குழந்தைகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு ஆலயத்தின் பின்புறத்தில் அழகுடன் ஒரு நுழைவு வாயிலை அமைத்து, அதனால் மக்களின் பள்ளி சிரார்களின் சிரமத்தை குறைத்தது கண்டு மக்களின் மகிழ்ச்சியில் பங்கு கொள்கிறோம்.

நம் புனிதரின் பெருவிழாவும், திரு சுரூப பவனியும்:
நமது மறைமாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் டிச. 3ம் தேதி புனித சவேரியாருக்காகவும் அவரின் மகிமைக்காகவும் நடத்தப்படும் திருவிழா சிறப்பு நிகழ்வுகளிலேயே எம் பங்கு திருவிழா நிகழ்வுகள் தான் முதலிடத்தையும், சிறப்பினையும் பெற்று புனிதரின் பெருமையையும், அற்புதங்களையும் வெளியுலகுக்கு எடுத்துச் சொல்வதில் முதலிடம் வகிக்கிறது.

புதிய முயற்சியாக எம்பங்குதந்தை, எம் மேய்ப்புப் பணிக்குழுவினர், அன்பியங்கள், பக்த சபையினர், இளையோர் இவர்களின் சீரிய முயற்சியுடன் ஏற்பாடு செய்யப்பட்ட, திருவிழா அன்று (டிசம். 3) மாலை புனிதரின் திருசுரூப சப்பர ஜெபமாலை பவனி எம்பங்கு முக்கிய தெருக்களின் வழியாக, பக்தி அலங்காரத்துடன் தேர்பவனியாக நடைபெறும் சிறப்பே சிறப்பு. அப்பவனியில் பிற சமயத்தவர்களின் பக்தி, நம்பிக்கை முயற்சிகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. பவனியின் முடிவில் திவ்ய நற்கருணை ஆசீர் சிறப்பாக நடைபெறும். புனிதரின் திருவிழா நினைவு நிகழ்வாக அன்று இரவு பங்குமக்கள் அனைவருமாக சேர்ந்து மகிழ்ச்சியுறும் வகையில் இரவு உணவு பரிமாறப்பட்டு, குடும்பத்தினருடன் உண்டு திருவிழா நிகழ்ச்சியினை நிறைவு செய்யும் விதம் காண கண் வேண்டும். கடந்த நான்கு ஆண்டுகளில் அருட்பணியாளரின் அன்புக் கட்டளைக்கு என்னுடன் பங்கு நிர்வாகத்தில் இணைந்து பணியாற்றிய பங்கு மேய்ப்புப் பணிக்குழு உறுப்பினர்கள், அன்பியப் பொறுப்பாளர்கள். இளையோர், அருள்சகோதரிகள், மறைக்கல்வி குழந்தைகள் ஆகியோருடன் சேர்ந்து எம் பங்கின் வளர்ச்சி எழுச்சி கண்டு பெருமிதம் கொள்கிறோம்

Succession of parish priests:
1. Rev.Fr. Gabriel - 1992 - 1993
2. Rev.Fr. Paul Rabinston - 1993 - 1995
3. Rev.Fr. Irudayaraj - 1995 - 1998
4. Rev.Fr. Rathnaraj - 1998 – 1999
5. Rev.Fr. Deniz Vaiz - 1999 – 2003
6. Rev.Fr. Job De Rose - 2003 – 2006
7. Rev.Fr. Paul Robinston - 2006 – 2009
8. Rev.Fr. Sahaya Lourdin - 2009 – 2014
9. Rev.Fr. Theophilus - 2014 - 2015
10.Rev.Fr. Antony Titus Roshan 2015 - 2017
11.Rev.Fr. Rainald Missier - 2017 - 2022
12.Rev.Fr. Amaladas S.M. - 2022

Grottos in the parish:
1. Our Ladu of Lourde’s - Rathnapuram

Catholic Population : 650

No. of Catholic Families : 160

Sunday Mass – Timings : 7.15. a.m.
Weekdays : 5.30 a.m

Participatory Structures
1. Anbiyams
2. 15 Pastoral Commissions
3. Parish Pastoral Council
4. Parish Finance Committee

Christian Life Societies (Pious Associations)

1. Holy Childhood
2. Matha Sodality
3. Legion of Mary

Other Associations & Activities
1. St. Xavier’s Catholic Youth
2. Krithavar Vazhvurimai Iyyakkam

Institutions under the Parish
R.C. High School, Rathnapuram, Thoothukkudi – 628 002
R.C. Primary School, Rathnapuram, Thoothukkudi – 628 002

Religious
Society of St. Anne (Chennai) (SSA)
St. Ann’s Convent, Rathnapuram, Thoothukkudi – 628 002 Tel : 0461 – 2329908

A monthly bulletin by name ‘Rathna Malar’ is published from the parish.

=========================

New Info, Tamil text (From Silver Jubilee Malar) provided by : Rev.Fr. Amaladas S.M.
Scanned pages 1 - 6, Previous file name : parish-rathinapuram-tuty0.htm
Updated on 15th Jan. 2023



 


image