image
image
image

Arockia Annai Church
Karungadal

as

as

Parish Name : Arockia Annai Church
Address : Karungadal - 628 613, Tuticorin Dt
Patron Saint : Arockia Annai
Telephone No :

A Brief History

This New parish was Established on September 8th, 2021 by Most Rev. Stephen A, the Bishop of Tuticorin.

கருங்கடல் பங்கின் வரலாறு
கருங்கடல் ஆரோக்கிய அன்னை ஆலயம் அமைந்துள்ள பகுதி தொடக்க காலத்தில் மாயகொத்தனேரி என அழைக்கப்பட்டுள்ளது. இங்கு வாழ்ந்த மக்கள் விவசாயம் மற்றும் பனையேறுதல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். பனை ஓலையால் அக்காலத்தில் ஆலயம் அமைந்திருந்தது. ஒரு மழைக்காலத்தில் மாயகொத்தனேரிக்கு வந்த ஆங்கிலேயர்கள் சிலர் ஊரைச்சுற்றிய கரிசல்மண் நிலப்பரப்பில் கடல்போல் நீர் சூழ்ந்திருந்ததைக் கண்டு ‘கருங்கடல்’ என்று அழைக்க, பின்பு அதுவே ஊரின் பெயராய் நிலைத்தது.

ஆரோக்கிய அன்னையின் புதுமை சுரூபம் மேதகு ஆயர் ரோச் அவர்களால் மேல்நாட்டிலிருந்து 1920களில் வருவிக்கப்பட்டு திருநிலைப்படுத்தப்பட்டது. சோமநாதபேரியின் கிளைப்பங்காக கருங்கடல் இருந்தது. அருட்தந்தை கபிரியேல் (1924-1946) இன்றைய ஆரோக்கிய அன்னையின் ஆலயத்திற்கு 1942ல் அடிக்கல் நாட்டினார். அவரைத் தொடர்ந்து அருட்தந்தை ஞானப்பிரகாசம் (1946-1951) அவர்களால் ஆலய அமைப்புப் பணிகள் நிறைவுபெற்று 1949ல் மேதகு ஆயர் பிரான்சிஸ் திபூர்சியஸ் ரோச் அவர்களால் புனிதப்படுத்தப்பட்டுள்ளது.

சிந்தாமணி மற்றும் சாத்தான்குளத்தின் கிளைப்பங்காக கருங்கடல் சிலகாலம் இருந்தபோது அங்கிருந்து வந்த குருக்கள் மக்களின் ஆன்மீக தேவைகளை நிறைவேற்றினர். 1993ல் கோவிலின் முன்பு கொடிமரம் புதுப்பிக்கப்பட்டு அமைக்கப்பட்டது.

செப்டம்பர் 2, 1995 ல் நொச்சிகுளம் பங்காக உருவானபோது கருங்கடல் அதன் கிளைப்பங்கானது. அதன் முதல் பங்குத்தந்தை சூசைராஜா (1995-2001) பங்கின் பொன்விழாவை முன்னிட்டு 1999ல்  கோவிலுக்குமுன் மணிமண்டபமும் சாலையும் உருவாக்கினார். அருட்தந்தை அமலன் (2001-2006) அருட்தந்தை கிஷோக் (2006-2011) அருட்தந்தை மைக்கிள் ஜெகதீஸ் (2011-2013) அருட்தந்தை ஜான் போஸ்கோ (2013-2018) அவர்களின் காலத்தில் இவ்வூர் பல்வேறு வளர்ச்சிகளைக் கண்டது.

அருட்தந்தை ஜான் பால் லோபோ (2018-2021)அவர்களின் பணிக்காலத்தில் செப்டம்பர் 8, 2021ல் மேதகு ஆயர் ஸ்டீபன் அவர்களால் நொச்சிகுளத்திலிருந்து பிரிக்கப்பட்டு கருங்கடல் தனிப் பங்காகத் திருநிலைப்படுத்தப் பட்டது. சி.சவேரியார்புரம் பங்கிலிருந்து கட்டாரிமங்கலம் மற்றும் சின்னமாடன்குடியிருப்பு ஆகிய ஊர்கள் கருங்கடலின் இணைப்பங்குகளாகின. அருட்தந்தை பாக்கிய ஜோசப் ராஜ் (2021- ) முதல் பங்குத் தந்தையாக நியமிக்கப் பட்டார்.

அன்னையின் பிறந்த நாளாம் செப்டம்பர் 8ல் மக்கள் ஆரோக்கிய தாய்க்கு தொன்றுதொட்டு விழா எடுக்கின்றனர். 1970 லிருந்து திருவிழாவுக்கு அடுத்த நாள் அசனம் அளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். வார நாட்களில் காலை 5.45க்கு செபமாலையும் அதன்பின் திருப்பலியும் நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 7 மணிக்கு செபமும் அதன்பின் திருப்பலியும் நடைபெறுகிறது.

கருங்கடல் கெபியின் வரலாறு
ஆகஸ்டு 8, 2001 அன்று அந்தோனிராஜ் அருள்மணி குடும்பத்தினரால், ஐந்து வயதில் ஒரு தீவிபத்தில் இறந்த அவர்களது மகள் நிர்மலா பொற்செல்வியின் நினைவாக கெபி ஒன்று கட்டப்பட்டது. மூன்று அடுக்குகளாக அமைந்திருக்கும் இக்கெபியில் மேலே புனித குழந்தை இயேசுவும், நடுவில் புனித அந்தோணியாரும் கீழ்தளத்தில் ஆரோக்கிய அன்னையின் திருவுருவமும் உள்ளது. அடுத்த ஆண்டு கெபி விரிவாக்கப்பட்டு இன்றைய தோற்றத்தை அடைந்துள்ளது. ஆண்டுதோறும் கெபிதிறந்த நாளாகிய மார்ச் 24ல் மக்கள் திருவிழா எடுத்து, அசனம் வழங்கி கொண்டாடுகின்றனர். வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் மாலை 6.30க்கு செபமாலையும் அதன்பின் திருப்பலியும் நடைபெறுகிறது.

கட்டாரிமங்கலம் இணைப்பங்கின் வரலாறு
இலங்கையில் பனைத்தொழிலுக்காக சென்ற முன்னோர்கள் அங்கு வணங்கிவந்த சந்தண மாதா (இலத்தீன் மொழியில் Sanctæ Annæ = புனித அன்னாள்) வின் திரு உருவத்தை தாய் நாடு திரும்பிவரும்போது தங்களோடு கொண்டுவந்தனர். அத்திருவுருவத்தை தற்போது கெபி அமைந்திருக்கும் இடத்தில் 1914ல் ஓலைக்கோவில் அமைத்து வழிபட்டனர்.

வெறும் ஏழே குடும்பத்தினரால் ஆரம்பிக்கப்பட்டு நாங்குநேரி மறைவட்ட குருக்களால் வழிநடத்தப்பட்ட கத்தோலிக்க திருச்சபையினர் நூற்றுக்கணக்காக வளர்ந்த நிலையில் பெரிய கோவிலின் தேவை ஏற்பட, 1962 ல் கோவில் விரிவாக்கப்பணிகள் தொடங்கப்பட்டன. பல ஆண்டுகளாக நடந்த வேலைகள் நிறைவேறி செப்டம்பர் 16, 1979ல் மேதகு அம்புரோஸ் ஆண்டகையால் திறக்கப் பட்டது.

சி. சவேரியார்புரத்தின் கிளைப்பங்காக மாறிய காலத்தில் அதன் முதல் பங்குத்தந்தை எட்வர்ட் ஜே (2000-2005) அவர்களால் கோவிலைப் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு செப்டம்பர் 1, 2005ல் மேதகு ஆயர் யுவோன் அம்புரோசால் திறக்கப்பட்டது. மீண்டும் 2019ல் அருட்தந்தை பீட்டர் பாஸ்டின் அவர்களால் கோவில் புதுப்பிக்கப்பட்டு மக்களின் முயற்சியால் இரட்டைக்கோபுரம் அமைக்கப்பட்டது. செப்டம்பர் 8, 2021ல் கருங்கடல் தனிப் பங்காகத் திருநிலைப்படுத்தப் பட்டபோது கட்டாரிமங்கலம் அதன் இணைப்பங்காக ஆனது.

ஆண்டுதோறும் ஆவணி இரண்டாம் வெள்ளியில் கொடியேற்றமும் அதனைத் தொடர்ந்து 10ம் நாளில் திருவிழாவும் நடைபெறுகிறது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு செபமாலையும் அதன்பின் திருப்பலியும் நடைபெறுகிறது.  

சின்னமாடன்குடியிருப்பு இணைப்பங்கின் வரலாறு
1960களில் கத்தோலிக்க சபையை தழுவிய ஒருசில குடும்பங்கள் பனை ஓலையினால் தூய அந்தோணியார் ஆலயம் அமைத்து வழிபட்டனர். சிந்தாமணியின் துணைப்பங்காக சேர்க்கப்பட்டு, அப்போதைய பங்குத்தந்தை அம்புரோஸ் (1961-1968) அவர்கள் மக்களின் ஆன்மீக தேவைகளை கவனித்துக்கொண்டார்.

அருள்தந்தை செங்கோல்மணி (1968-1970) அவர்கள் மக்களுக்கு சாதி மத பேதமின்றி வீடுகள் கட்டிக்கொடுத்தார். பஞ்சகாலத்தில் எல்லா மக்களுக்கும் கோதுமை போன்ற உணவுப்பொருட்கள் கிடைக்கச் செய்தார். எல்லா மக்களின் ஒத்துழைப்போடு ஓட்டுக்கூரை கொண்ட ஆலயமாக விரிவு செய்தார். ஆகஸ்ட் 27, 1978ல் மேதகு ஆயர் அம்புரோஸ் அவர்களால் திருநிலைப்படுத்தப்பட்டது.

சிந்தாமணியிலிருந்து பிரிக்கப்பட்டு சி. சவேரியார்புரம் 1999ல்  தனிப்பங்காக மாறியபோது சின்னமாடன்குடியிருப்பு அதன் துணைபங்காக மாறியது. அதன் முதல் பங்குத்தந்தை எட்வர்ட் ஜே (2000-2005) அவர்களால் கல்நாராலான மேற்கூரையும் தளமும் அமைக்கப்பட்டு கோவில் புதுப்பிக்கப்பட்டது. மக்களின் முயற்சியால் ஆலயத்தை சுற்றி கோட்டைச் சுவர் அமைக்கப்பட்டு மரங்கள் நடப்பட்டு ஊர்மக்களுக்கு பயன்படும் வகையில் கிணறும் தோண்டப்பட்டது. தொடக்கத்தில் இரண்டு அருட்சகோதரிகள் கோவிலில் தங்கியிருந்து பணியாற்றினர். தற்போது சி. சவேரியார்புரத்திலிருந்து வந்து பணியைத் தொடர்கின்றனர்.

செப்டம்பர் 8, 2021ல் கருங்கடல் தனிப் பங்காகத் திருநிலைப்படுத்தப் பட்டபோது சின்னமாடன்குடியிருப்பும் அதன் இணைப்பங்காக ஆனது.

ஆண்டுதோறும் மேமாதம் முதல் செவ்வாயில் கொடியேற்றமும் அதனைத் தொடர்ந்து 13ம் நாளில் திருவிழாவும் நடைபெறுகிறது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 7 மணிக்கு செபமாலையும் அதன்பின் திருப்பலியும் நடைபெறுகிறது.

Succession of parish priests:
1. Rev.Fr. Packia Joseph Raj 2021 -

Grottos in the parish:
1. Arockia Matha, Karungadal : Every Thursday 6:300 Rosary & Mass
2.

Catholic Population : ?

No. of Catholic Families : ?

Sunday Mass – Timings Parish :  Sunday 7.00 a.m. (Rosary & Mass)
Weekdays : 5.45 a.m (Rosary and Mass)

Sub – Stations
1. Kattarimangalam : Sundays 11:00 Rosary and Mass
2. Chinna Maadan Kudiyiruppu : Sundays 7:00 p.m. Rosary and Mass

Participatory Structures
1. Anbiyams
2. 15 Pastoral Commissions

Christian Life Societies (Pious Associations)
1.

Institutions under the Parish :

Religious :

 

=============================

New Info provided by : Rev.Fr. Packia Joseph Raj
Zip file received through whatsapp Messager Service Feb.14th 2023
Updated on 16th Feb. 2023

 



 


image