Our Lady of Fatima Church
Fatima Nagar, Tuticorin
Parish Name : Fatima Church
Address : Fatima Nagar, Tuticorin – 628 003
Patron Saint : Our Lady of Fatima
Telephone No : 04631 - 2322146
A Brief History :
Fatima Nagar is situated on the southern part of the town. The place was once called ‘Manalmaedu’ because of the huge sand dune over which the settlements came up. Originally this area was part of Cathedral Parish. Rev. Frs. Paul Alangaram and Sebatian Fernando took care of the spiritual needs of the people who got settled there. The area was made a substation to St. Antony’s parish. On the 14th June 1984, Fatima Nagar was made into a separate parish. Rev. Fr. Thilagaraj was the first parish priest. Rev. Fr. Thilagaraj built the presbytery, which was extended by Rev. Fr. Selva George and Rev. Fr. Jose Bruno built the first floor of the presbytery.
Succession of parish priests:
1. Rev.Fr. Thilagaraj - 1984 – 1987
2. Rev.Fr. Xavier Ignatius - 1987 – 1991
3. Rev.Fr. Selva George - 1991 – 1996
4. Rev.Fr. Pancras Fdo - 1996 – 2001
5. Rev.Fr. Bruno - 2001 – 2006
6. Rev.Fr. Sahaya Raj Rayen - 2006 – 2011
7. Rev.Fr. Viagula Marian - 2011 - 2016
8. Rev.Fr. Antony Pitchai 2016 -
2021
9. Rev.Fr. Jesudas Fernando 2021 -
Grottos in the parish:
1. St. Sebastian - Fatima Nagar
2. St. Antony - Fatima Nagar
Catholic Population : 7100
No. of Catholic Families : 1206
Sunday Mass – Timings : 5 a.m., 7.00 a.m. ; 5.30 p.m
Weekdays : 6.00 a.m; 5.30p.m
Eucharistic Chapel Timings : 8 .00a.m. – 8 .00p.m.
Chapel where mass is celebrated periodically
Side Chapel : 1. PVR puram – Vailankanni Matha – Sunday 6.00 a.m
Participatory Structures
1. Anbiyams
2. 15 Pastoral Commissions
3. Parish Pastoral Council
Christian Life Societies (Pious Associations)
1. Holy Childhood
2. Eucharistic Crusaders
3. Amalorpava Matha Sodality
4. Holy Family Sodality
5. Valanar Sodality for Men
6. Legion of Mary
7. Vincent de Paul Society
8. Our Lady of Fatima Youth Movement
Other Associations & Activities
1. Altar Boys Association
2. Kolping Movement
3. Prayer Group
4. Mahalir Mantrams
5. Baptism Teachers Group
6. Krithavar Vazhvurimai Iyyakkam
7. Servants of Fatima Group
Institutions under the Parish
Fatima Middle School, Fatima Nagar, Thoothukkudi – 628 003 Tel : 0461 – 2321815
Religious
Sacred Heart Sisters (SHS)
Sacred Heart Convent, Fatima Nagar, Thoothukkudi – 628 003 Tel: 0461 – 2339042
------------
Added History:
எங்கு நோக்கினாலும் மணல் குன்றுகள். மணல் மேடுகள். ஆங்காங்கே முட்புதர்கள். அடர்ந்து குடை போல், முட்கள் நிறைந்த உடைமரங்கள். தூக்கில் தொங்க வேண்டுமா? பூச்சி மருந்து அருந்தி சாக வேண்டுமா? கொலையா? தற்கொலையா? ஓடு, மணல்மேட்டிற்கு, இதுதான் சுமார் 50ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த மணல்மேட்டின் வரலாறு கிறிஸ்தவக் கல்லறைத் தோட்டத்திற்கு பின்புறம் இருந்த மணல்தேரி என்பதால் இரவில், ஏன் பகலில் கூட மக்கள் நடமாட பயந்திருந்த காலம். இத்தகையை காலத்தில்தான் வீடில்லாமலும், வெளியூர்களில் இருந்தும் வந்த மக்கள் துணிவுடன் குடிசைகள் போட்டு குடியேற ஆரம்பித்தனர். சுமார் ஐந்து ஆண்டுகளுக்குள் நூற்றுக்கும் மேற்ப்பட்ட குடிசைகள் தோன்றின. இந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடிசைகள் தான் மணல்மேடு என்று மக்களால் அழைக்கப்பட்ட ஊர். இன்று சுமார் 1200க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.
ஆலயத் தோற்றம்:
"கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பதற்கேற்ப, கல்வியறிவு உள்ள மக்கள் சிலர், தங்களது தேவைகளை இறைவனிடம் எடுத்தியம்ப, கோவில் ஒன்று அவசியம் என்று உணர்ந்தனர். ஓலைக் குடிசைக் கோவில் ஒன்றை அமைத்தனர். தினசரி செபத்திற்கு குடும்பங்கள் ஒன்று கூடின. மக்கள் திருப்பலி காண பக்கத்திலுள்ள புனித அந்தோணியார் ஆலயத்திற்கு, அல்லது பரி. பனிமய அன்னை ஆலயத்திற்குச் சென்று வந்தனர். எனவே, ஞாயிறு திருப்பலிக்காக ஆயர் இல்லம் சென்று, மறைந்த மேதகு தாமஸ் ஆண்டகை அவர்களிடம் தங்கள் வேண்டுதலை முன் வைத்தனர். ஆயரின் பரிந்துரையுடன் பரி. பாத்திமா அன்னையின் சுரூபம் மந்தரிக்கப்பட்டு, மறைந்த அருட்தந்தை. பவுல் அலங்காரம் அடிகளார் அவர்களால், ஞாயிறு தோறும் திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது. அவர்களைத் தொடர்ந்து மறைந்த அருட்தந்தை. செபஸ்தியான் அடிகளார் அவர்களால், ஞாயிறு திருப்பலி தொடரப்பட்டது. அன்னையின் திருச்சுரூபம், திரு. மரியமிக்கேல் அவர்களால் கோவிலுக்கு வழங்கப்பட்டது. கோவில் செப வழிபாடுகளுக்கு திருமதி. சூசையம்மாள் அலங்காரம் வாயிஸ் பொறுப்பேற்றார்கள். இவர்கள், புனித சவேரியாரைப் போல, விடியற்காலை ஞாயிறு திருப்பலிக்கு, கைகளில் மணியை ஒலித்துக் கொண்டு வீதிகள் தோறும் சென்று மக்களை தயார்படுத்துவார்கள்.
பங்கின் ஆரம்பநிலை:
“தங்களிடம் உள்ளதெல்லாம் பகிர்ந்து கொண்டனர்” என்ற ஆதித் திருச்சபையின் வாழ்வையே அன்றைய மக்கள் வாழ்ந்தனர். நான்கு திசைகளிலிருந்தும் வந்து குடியேறிய மக்களிடையே உறவுகள் மலர்ந்தன. உறவினர்கள் ஆயினர். கோவில் பரி. பாத்திமா அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்டதால், மணல்மேடு என்ற பெயரில் விளங்கிய ஊர் “பாத்திமா நகரானது" மக்களின் தேவைகளுக்கு உழைப்பதற்கென திரு. ஆரோக்கியசாமி பர்னாந்து, திரு. நசரேன் பானாந்து, திரு. மரியமிக்கேல், திரு. அம்புரோஸ் கர்வாலோ, திரு. சிங்கிராயன் பர்னாந்து, காலப்போக்கில் திரு. சிலுவை பர்னாந்து, திரு. தொம்மை முறாயிஸ் (பெயர்கள் விடுபட்டிருந்தான் மன்னிக்கவும்) போன்ற பெரியவர்கள் தங்கள் உடலுழைப்பையும், பொருள் உதவியையும் தாராளமாக அளித்து வந்தனர். ஊர் மக்களுக்காக கிணறுகள் தோண்டப்பட்டன. குப்பைகள் அகற்றப்பட்டு வீதிகள் தோன்றின. சிறுவர், சிறுமியர் பள்ளிகளுக்குச் சென்றனர். பாத்திமா நகரானது, பக்கத்திலுள்ள புனித அந்தோணியார் ஆலயப் பங்கின் இணைப்பங்கானது.
ஆலய வளர்ச்சி:
புனித அந்தோணியார் ஆலய பங்குத் தந்தை அருட்திரு. ஞானப்பிரகாசம் சுவாமியவர்கள் அன்னையின் குடிசைக் கோவிலை அகற்றி, பெரிய ஆலயம் ஒன்று அமைக்க ஆரம்பித்தார்கள். அஸ்திவாரம் எழுப்பப்பட்டபின் தந்தையவர்கள் பங்கு மாறிச் சென்றதால், அடுத்து வந்த தந்தை ஹெர்மஸ் அடிகளார் அவர்கள் ஆலயத்தை எழுப்பி முடித்தார்கள். பகலில் வேலைக்குச் செல்லும் மக்கள், இளைஞர். இளம்பெண்கள், பள்ளி மாணவர்கள் முதற்கொண்டு மாலைவேளைகளில் மணல், கற்கள், சிமெண்ட் கலவை சுமந்து கோவில் வளர ஒத்துழைத்தனர். ஆரம்பத்தில் கோவில் எழும்ப தடைகள் வந்தாலும், அன்னையின் அருளால் யாவும் நீங்கி ஆலயம் வானுயர எழும்பியது. தந்தை சேவியர் S. மரியான் அவர்களால் ஆலயக் கோபுரம். ! எழுப்பப்பட்டது. அன்றைய பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக நூல் நூற்பு நிலையமும், வலை பின்னும் தொழிலையும் தந்தை சேவியர் S. மரியாள் அடிகள் ஆரம்பித்து வைத்தார்கள். வேலைக்கு கூலியாக கோதுமையும் எண்ணெயும் வழங்கப்பட்டது. திருமதி. குழந்தையம்மாள் அவர்கள் மேற்பார்வையிலும், வழி காட்டலிலும் நூற்பு நிலையம் நன்கு செயல்பட்டு வந்தது. இதனால் பல பெண்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தது.
தனிப்பங்கு:
மாதா பக்தியில் மக்கள் நிலைத்திருந்த காலம், பிறசபைகள் புற்றீசல்கள் போல் தோன்றாத காலம்; செபமாலைப் பக்தி தழைத்தோங்கிய காலம். அப்பொற்காலத்தில் தான் எம்பங்கு தனிப்பங்காக மேதகு. அம்புரோஸ் ஆண்டகை அவர்களால் அறிவிக்கப்பட்டது. 1984ம் ஆண்டு ஜுன் திங்கள் 14ம் நாள் பாத்திமா நகர் தனிப்பங்கானது. முதற்பங்குக் குருவாக அமரர் அருட்திரு. அந்தோணி திலகராஜ் அடிகள் பொறுப்பேற்றார்கள். நடமாடும் புனிதர் என எம் மக்களால் பாராட்டப்பட்டவர். மக்களின் ஆன்மீக வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டார். மறைக்கல்வி கற்கும் சிறுவர்களை "மலர்த்தோட்டம்" என்றே குறிப்பிடுவார். மிகமிக நல்லவராக மக்களுக்கும், இறைவனுக்கும் பணியாற்றியதால், இறைவன் விரும்பி அவரை தம்மிடம் அழைத்துக் கொண்டார்.
பங்குத் தந்தையர்களின் பணி:
தந்தை அருட்திரு. அந்தோணி திலகராஜ் அடிகளைத் தொடர்ந்து, தந்தை சேவியர் இக்னேஷியஸ், தந்தை செல்வஜார்ஜ், தந்தை பங்கிராஸ், தந்தை ஜோஸ் புருனோ ஆகியோர் எம் பங்குத்ததையர்களாக பணியாற்றியுள்ளனர். இவர்களது அருட்பணிகளால் எம் பங்கு மென்மேலும் வளர்ந்து வந்தது. தந்தை சேவியர் இக்னேஷியஸ் அவர்கள், வீட்டு மனையுள்ள சிலருக்கு வீடுகள் கட்டுவதற்கு, வெளிநாட்டு உதவி பெற்றுக் கொடுத்தார்கள். தந்தை செல்வ ஜார்ஜ் அவர்களால் பள்ளிக்கட்டிடமும், பாலர் பள்ளியும் கட்டப்பட்டது. கோவிலும் விரிவுபடுத்தப்பட்டது. அமலோற்பவ அன்னை கெபியும், அருட்தந்தை திலகராஜ் அடிகள் நினைவு கட்டிடமும், ஆயர் பீற்றர் பர்னான்டோ பெயர்தாங்கிய கட்டடமும், குருக்கள் இல்லமும் அவர்களாலேயே எழுப்பட்டது. மக்களின் குடிநீர் பிரச்சனையை நீக்க, தெருக்களை புல்டோசர் என்ற கருவியின் மூலம் ஆழப்படுத்தி, குடிநீர் குழாய்கள் பதித்ததும் அவரது முயற்சியால் தான். தந்தை பங்கிராஸ் அடிகளார் அவர்களால் கோவில் பீடம் புதுப்பிக்கப்பட்டது. தந்தை புருனோ அவர்களால் கோவில் மேலும் விரிவுபடுத்தப்பட்டு, தற்போதைய பீடமும், நற்கருணை நாதர் ஆலயமும், பாத்திமா அன்னை சமுதாய நலக்கூடமும் எழுப்பப்பட்டது. அருட்தந்தையர்களுக்கு எம் நன்றி.
எமது தற்போதைய பங்குத் தந்தை சகாயராஜ் ராயன் அவர்களால் எம் பங்கு மேலும் வளர்ச்சியுற்று வருகிறது. ஆளைப் பார்த்து எடைபோடாதே என்பது அவரது அளவில் உண்மை. பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும் காரியங்களை சாதிப்பதில் வல்லவர். அவரது முயற்சியால் கோவில் முகப்பு முற்றமும், கோவிலின் உள் சுமைப்பும் வெள்ளிவிழா நினைவாக பங்கின் நுழைவாயில் தூண்களும் அமைக்கப்பட்டன. முதல் முறையாக, பங்கு மேய்ப்புப்பணிக்குழுவும், நிதிக்குழுவும் உருவாக்கப்பட்டுள்ளன.
அன்னைக்கு நன்றி:
25 ஆண்டுகளாக வளர்ச்சியின் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கும் எம்பங்கு, துத்துக்குடி மறைமாவட்டத்தில் பெயர் சொல்லும் பங்காக மாறியதற்கு, எம் அன்னையின் வழி நடத்துதலும் செபமாலைப் பக்தியுமே காரணமாகும். மறைந்த மேதகு ஆயர் தாமஸ் பர்னாந்து அவர்கள், திருச்சியில் ஆற்றிய மறையுறையில், துத்துக்குடி மக்கள் மாதா பக்தியிலும், செபமாலைப் பக்தியிலும் சிறந்தவர்கள்.
எப்படியெனில் சினிமா தியேட்டருக்குச் சென்றாலும் கூட கையில் செபமாலை வைத்திருப்பார்கள் என்றார்களாம். இன்றும் எம்மக்களின் செபமாலைப் பக்தி வளர்ந்து தான் வருகிறது. மக்கள் கூடி செபிப்பதற்காக, திருச்சிலுவைநாதர் சிற்றாலயார் தற்போது எம் பங்கில் இயங்கி வருகிறது. செபிக்கும் மக்கள், தங்கள் கேள் நிறைவுறுவதை அனுபவித்து வருகின்றனர். மேலும், எம் பங்கில் அமலோர் மாதா பெண்கள் சபை, திருக்குடும்ப சபை, புனித வின்சென்ட் தெ பால் சபை மரியாயின் சேனை, புனித வளனார் சபை, பாலர் சபை, நற்கருணை வீரர் சபை. திருச்சிலுவை நாதர் செபக்குழு, கோல்பிங் இயக்கம் என பக்த சபைகள் தங்களுக்குரிய பணிகளில் திறம்படச் செயல்பட்டு வருகின்றன.
எம் அன்பின் பங்கு:
எம் பங்கின் பாதுகாவலி பரி. பாத்திமா அன்னையின் ஆதரவிலும், அரவணைப்பிலும் வாழ்ந்து வரும் எம் பங்கின் மக்கள் இன்று கல்வியிலும், பொருளாதாரத்திலும், ஆன்மீகத்திலும் வளர்ச்சி பெற்றுள்ளனர். அருட்தந்தையர்களாக, கன்னியர்களாக, மருத்துவர்களாக, கட்டடக்கலை வல்லுநர்களாக, ஆசிரியர்களாக, மருத்துவச் செவிலியர்களாக, கணினி வல்லுநர்களாக, கப்பல்களில், துறைமுகங்களில், தொலைக்காட்சி நிறுவனங்களில், விளம்பரத் துறைகளில் பணிபுரிபவர்களாக வளர்ந்து வருகின்றனர். எம் பங்கு மக்கள் அனைவரும், எம் பங்கை உள்ளார்ந்த அன்புடன் நேசித்து வருகிறோம். வளர்பிறையென வளரும் எம் அன்பின் பங்கு, என்றும் முழு நிலவாக ஒளிவீச, எம் அன்னை அருள்புரிவாள். அவளது ஆசீர் எமக்கு என்றும் உண்டு என்ற உறுதியான நம்பிக்கையுடன், எம் பங்கு தூத்துக்குடி மறைமாவட்டத்தில் நிமிர்ந்து நிற்கிறது என்றால் அது மிகையாகாது.
இயேசுவின் பாதையில், எம் அன்னையின் கரம் பிடித்து வழி நடப்போம்.
- திருமதி எமல்டா போஸ்கோ (பங்கின் வெள்ளிவிழா மலரிலிருந்து)
=========================
Corrections added to the existing content by : Rev. Fr. Jesudas Fernando
Scanned pages: 34-37(Histoy in Tamil added). Previous file name : parish-fatima-nagar-tuty0.htm
Updated on 14th Oct. 2022
|